New year offer 2017

இலங்கை செய்திகள்

19 ஆம் திகதி ஐ தே கட்சியில் மாற்றம் அலரி மாளிகையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

04/16/2018

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தான பத­விகள் 19 ஆம் திகதி நிரப்­பப்­ப­டு­மென தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்­கிய தேசியக் கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­சியல் சபை கடந்த வாரம் அலரி மாளிகையில் முதன்­மு­த­லாக கூடி­யது.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

19 ஆம் திகதி எடுக்கப்படும் முடிவானது ஐ.தே.கட்­சியின் மே தினக் கூட்­டத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட உள்ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்­புக்­கான அர­சியல் சபை கடந்த 7ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்­டது.

ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ர­ம­சிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இச்­ச­பைக்கு பதவி வழி­யாக நிய­மனம் பெற்­றுள்­ளனர்.

அத்­துடன் நவீன் திசா­நா­யக்க, அகில விராஜ் காரி­ய­வசம், மங்­கள சம­ர­வீர, ரஞ்சித் மத்­தும பண்­டார, ஹரின் பெர்­னாண்டோ, ருவன் விஜே­வர்­தன, அஜித் பீ பெரேரா, இரான் விக்ரமரட்ன, ஜே. சி. அலவத்துவல, நளின் பண்டார, அசோக பிரியந்த ஆகியோரும் அரசியல் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், தவிசாளர் மலிக் சமரவிக்ரம, பொருளாளர் எரான் விக்ரமரட்ன ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.