New year offer 2017

இலங்கை செய்திகள்

கண்டியில் வன்முறை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

05/14/2018

கண்டி பொலிஸ் பிரிவில் அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 35 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் தெல்தெனிய நீதவான் எம்.எச். பரிக்டீன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மஹாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் ஏனையோர் பல்லேகலை -தும்பர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்னர்.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாட்டின் பல பகுதிகளில் இவர்களை கைதுசெய்தனர்.

கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டமை மற்றும் இனவாத மோதல்களை ஏற்படுத்தியமை உட்பட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.