New year offer 2017

இலங்கை செய்திகள்

நாளை முதல் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்

05/15/2018

பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய நாளை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதத்தில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் நடைமுறையிலுள்ள குறைந்த பட்ச கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதென அமைச்சர் ரஞசித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் கட்டண அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.