New year offer 2017

இலங்கை செய்திகள்

அரசாங்க ஊடக நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் அதிரடி மாற்றம்

05/15/2018

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க ஊடக நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கமைய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக இனோகா சத்யாங்கநீ நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பின் (ITN) புதிய தலைவராக நிதி மற்றும் ஊடக அமைச்சின் அபிவிருத்தி தொடர்பான மேலதிக செயலாளர் திலகா ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சித்திக் மொஹமட் பறூக்கும், செலசின் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக உமா ராஜமந்திரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.