New year offer 2017

இலங்கை செய்திகள்

தமிழர்களை காப்பாற்றத் தவறிய ஐ நா ரோஹிங்கிய அகதிகள் விடத்திலும் தோல்வி

05/15/2018

இலங்கையில் 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களை காப்பாற்ற தவறிய ஐக்கிய நாடுகள் சபை இன்று ரோஹிங்கியா அகதிகள் விடயத்திலும் தோல்வி கண்டுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களை காப்பாற்றுவதில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் தோல்விக்கண்டதால், அங்கு தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இதேபோன்ற ஒரு நிலையே இன்று மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விடயத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த விடயத்திலும் ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை என்று இன்னர் பிரஸ் சிட்டி குற்றம் சுமத்தியுள்ளது.