New year offer 2017

இலங்கை செய்திகள்

மைத்திரி ரணிலின் நடத்தையை கடுமையாக விமர்சிக்கும் மகிந்த

06/11/2018

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிகளில் மாற்றம் செய்வதால், கட்சியை எப்போதும் கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் எந்த பயனுமில்லை. முதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பாடகர் மதுமாதவ அரவிந்த எழுதியுள்ள “மம எத்தக்” என்ற நூல் வெளியிட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி பகிரங்கமாக பிரதமரை விமர்சிக்கின்றார். பிரதமர் ஜனாதிபதியை விமர்சிக்கின்றார். நாட்டின் தலைவர்களின் இவ்வாறான நடத்தை சமூகத்திற்கு பெரிய கேடு.

ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக கூறுகின்றனர். அதுவும் சந்தேகத்திற்குரிய நிலைமையாகவே உள்ளது. மீண்டும் சூழ்ச்சி செய்து தேர்தலை நடத்தாமல் விட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.