New year offer 2017

இலங்கை செய்திகள்

அரசியல் இலாபங்களுக்காக பணத்தை பெறுவது மிகப் பெரிய தவறு: விக்னேஸ்வரன்

06/11/2018

அரசியலில் இலாபங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பணத்தை பெற்றுக்கொள்வது மிகப் பெரிய தவறு என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொள்ளும் நபர்கள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு, நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அரசியல்வாதிகள் அவற்றுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.