New year offer 2017

இலங்கை செய்திகள்

அரசாங்கதை யாரும் விமர்சிக்க முடியும் அகில விராஜ் காரியவசம்

06/12/2018

அரசாங்கத்தை மாத்திரமல்லாது அரச தலைவர்களையும் விமர்ச்சிக்கக்கூடிய சுதந்திரம் இன்று நாட்டிலிருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருநாகல் – இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றி, ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் நிலைநாட்ட அரசாங்கத்தால் முடிந்துள்ளது.

ஆனால் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தையோ, அரச தலைவர்களையோ விமர்ச்சித்தவர்களை வெள்ளை வான்களில் கடத்தப்பட்டார்கள். இந்த நிலமை இன்று இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.