New year offer 2017

இலங்கை செய்திகள்

இந்து மத விவகார பிரதி அமைச்சரான முஸ்லிம் எம் பியின் நிலைப்பாடு என்ன

06/12/2018

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஐந்து பேரும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதில் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சுப்பதவி குறித்து பலரானும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

அதாவது மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் ஒருவருக்கு இந்து மத விவகார அலுவல்கள் பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டமையே இதற்கு காரணமாகும். இந்த அமைச்சுப்பதவி குறித்து காதர் மஸ்தான் விளக்கமளிக்கையில்,

வடக்கில் அபிவிருத்தி என்பது மந்த கதியில் நடைபெறுகின்றது. வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சுப்பதவி சிறந்த ஒன்றாக இருக்கும்.

மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து அதற்கு தீர்வு தேடி கொடுக்கப்படும்.

மேலும், எனது மாவட்டத்தில் இந்து மக்களே அதிகமாக இருக்கின்றார்கள். எனக்கு இந்து மக்களின் ஆதரவும், அவர்களின் வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஆகவே அவர்களுக்கும் நான் ஏதாவது செய்ய வேண்டும். இதற்கு இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டடில் அவருடைய ஆலோசனையுடன் இந்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தான் ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.