New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கை முன்வைத்த யோசனை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்

07/09/2018

இடர் முகாமைத்துவம் சம்பந்தமான ஆசிய படையணியை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை முன்வைத்த யோசனையை அமுல்படுத்துவது என ஆசிய பிராந்திய இடர் முகாமைத்துவ மாநாடு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

மொங்கோலியாவின் உலம்படார் நகரில் நான்கு நாட்கள் பெற்ற இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது.

இலங்கை சார்பில் இடர் முகாமைத்துவம், நீர்பாசனம், நீர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

இதற்கு அமைய ஆசிய அவசர பதில் அதிரடிப்படை (Asian Emergency Response Task Force) என்ற பெயரில் இடர் முகாமைத்துவ படையணி ஸ்தாபிக்கப்பட உள்ளதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.