New year offer 2017

இலங்கை செய்திகள்

புலம்பெயர் தமிழர்களிடம் பிரதமர் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

08/08/2018

யுத்தகாலத்தில் நாட்டில் இருந்து வெளியேறிச் சென்ற அனைவரும் நாடு திரும்ப வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“யுத்தக்காலத்தில் நாட்டில் இருந்து வெளியேறிய அனைவரும் நாடு திரும்ப வேண்டும். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது.

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, அவர்களது உடமைகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இந்திய அரசாங்கம் கடல்வழி போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முகாம்களில் வாழும் ஈழ அகதிகளில் 3 ஆயிரத்து 815 பேர் நாடு திரும்ப விருப்பம் கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் வீட்டுத் திட்டம் அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து உரிய நிறுவனங்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். அதேபோல் மேலதிகமாக 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைதிட்டங்கலாயையும் கையாண்டு வருகின்றோம்.

விரைவில் சகல மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும். அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்ப்போம்.

இந்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுத்தருவது அரசாங்கதின் பொறுப்பு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.