New year offer 2017

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு

09/13/2018

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் நிலவிய யுத்தத்தினால் சேதமாக்கட்டப்பட்ட ஆலயங்கள் மற்றும் உறவுகளை இழந்தோர், அங்கங்களை இழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கான நட்டஈட்டு காசோலைகள் ஒரு தொகுதியினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநாச்சிய மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 252 பேருக்கு 21,465,990 மொத்தமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும், நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபை தலைவர் அன்னலிங்கம், அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.