New year offer 2017

இலங்கை செய்திகள்

தோப்பூர் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்

09/13/2018

கடந்த பல வருடகாலமாக உதவி பிரதேச செயலகமாக இயங்கி வரும் தோப்பூர் உப பிரதேச செயலகம் 2018ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் தனிப் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படுமென மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக்கு குழுவின் இணைத் தலைவர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை இந்த வருடம் தோப்பூர் பிரதேச உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற அதேவேளை, 2019ம் ஆண்டு திருகோணமலையில் மூன்று பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படும்.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்த்தன மேற்கொண்டு வருகின்றார். அதற்கான முழு உதவிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

மூதூர் பிரதேச சபையை நகர சபையாகவும், மூதூர் பிரதேச சபையின் கீழ் தற்போது இயங்கி வரும் தோப்பூர், கட்டைபறிச்சான் போன்ற பிரதேசங்களில் புதிய பிரதேச சபைகளை உருவாக்குவதற்கான நகல் திட்டங்களை தயாரித்து அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஒப்படைத்துள்ளோம். அந்த வேலைகள் விரைவில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ண சிங்கம், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.