New year offer 2017

இலங்கை செய்திகள்

கூட்டமைப்பினர் என்னுடன் பேச தயாராகயில்லை, ரணிலையே நம்பினார் மனம் திறந்தார் மகிந்த

09/13/2018

நாட்டை பிரித்து தமிழ் மக்களுக்கு சமஸ்டியை வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கை ஒரு சிறிய நாடு. ஆகையினால் நாட்டை பிரிக்க முடியாது. தமிழ் மக்களுக்கு சமஸ்டியையும் வழங்க முடியாது. அதற்கான சாத்தியமும் இல்லை.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேச தயாராகயில்லை. ரணில் அவர்களிற்கு சிறந்த தீர்வை வழங்குவார் என நம்பினார்கள்.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இது வரைக்கும் தீர்மானிக்கவில்லை. நாங்கள் சிறந்த வேட்பாளர் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், சிறந்த வேட்பாளர் கிடைக்காவிட்டால் நானே போட்டியிடவேண்டியிருக்கும் என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.