New year offer 2017

இலங்கை செய்திகள்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு

10/10/2018

பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோர் சம்பந்தப்பட்ட கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பது யார் என்பதை உடனடியாக கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய நாலக டி சில்வா சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சதித்திட்டம் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சில சீடிகளை நாமல் குமார என்பவரால் அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.