New year offer 2017

இலங்கை செய்திகள்

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் பிணையில் விடுதலை

10/10/2018

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரித்தானிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சொக்கலிங்கம் யோகலிங்கம் 24 மணிநேரத் தடுப்புக் காவலின் பின் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் நேற்று கைது செய்யப்பட்ட ஏனைய தமிழ் செயற்பாட்டாளர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய விசாரணைகள் தொடர்வதாகக் கூறியே இவர்கள் அனைவரையும் பிரித்தானிய பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

அதேவேளை, யோகலிங்கத்தின் வாகனமும், அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களும் தற்பொழுது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.