New year offer 2017

இலங்கை செய்திகள்

பசில் ராஜபக்சவின் ஒப்புதலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

10/11/2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடந்தது என்பதை பசில் ராஜபக்ச ஒப்பு கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பசில் ராஜபக்ச, தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த சந்திப்பு பற்றி தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன் பேச்சுவார்த்தைக்கு பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதியை சந்தித்ததை பசில் ராஜபக்ச ஒப்பு கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும் பசில் ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியன இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கும் பின்னணியில், பசில் ராஜபக்ச, தான் ஜனாதிபதியை சந்தித்ததாக வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.