New year offer 2017

இலங்கை செய்திகள்

நாட்டின் அரசியல் பிரச்சினையை தீர்க்க பி பிளேன்

11/06/2018

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையை தீர்க்க மாற்றுவழி ஒன்று குறித்து ஆராயப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோர் நேற்று ஜனாதிபதியை சந்தித்தபோது இது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

இதன்படி மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தவிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஒருவரை பிரதமராக்கி அவரின் கீழ் தேசிய அரசாங்கம் ஒன்றை அடுத்த நாடாளுமன்றத்தேர்தல் வரையில் முன்னெடுக்கும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது

ஏற்கனவே மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

மறுபுறத்தில் ரணில் மீண்டும் பிரதமராவது ஜனாதிபதி மைத்திரி விரும்பவில்லை. இந்தநிலையிலேயே புதிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி புதிய அமைச்சரவைக்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமாராக இல்லாமல் தவிர்க்கப்படுவார். அதேநேரம் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, அதில் இருந்து விலகி அமைச்சராக பதவியேற்பார்.

இந்தநிலையில் புதிய தேசிய அரசாங்கம் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என்ற ஆலோசனையும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் பேசப்பட்ட இந்த விடயங்கள் குறித்து ராஜித சேனாரத்ன, ரணில் விக்கிரமசிங்கவுக்கு தகவல் வழங்கியுள்ளார். எனினும் இன்னும் ரணில் தரப்பில் இருந்து பதில் வழங்கப்படவில்லை.

இதேவேளை சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாகவே எதிர்வரும் 14ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தை கூட்ட மைத்திரி இணங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.