New year offer 2017

இலங்கை செய்திகள்

மைத்திரி மீது கடுமையாக கோபமடைந்த மகிந்தவின் சகா

11/07/2018

ஜனாதிபதியின் நடவடிக்கையால் நாடு செயலிழந்துள்ளதாகவும், ஆகையினால் நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறும் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், உலகநாடுகள் மத்தியில் ஜனாதிபதி சிறிசேன இலங்கையை நகைச்சுவை பொருளாக்கியுள்ளார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர். “ நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, தீர்த்துக்கொள்ள நாடா ளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும்.

எமது நாடு அதளபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அரச அலுவலகங்களில் எவரும் பணிபுரியாத நிலை உருவாகியுள்ளது. அரச ஊழியர்கள் யார் உண்மையான பிரதமர் என தெரியாமல் தடுமாற்றத்தில் உள்ளனர்.

இதனால் நாட்டு மக்களும் குழம்பிப்போயுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொருநாடும் எங்களை பார்த்து சிரிக்கின்றது அலரிமாளிகையில் ஒரு பிரதமர் இருக்கின்றார் மற்றொரு பிரதமர் பிரதமர் அலுவலகத்தில் இருக்கின்றார்.

ஆகையினால், இந்த விடயத்திற்கு நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வை காணவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..