New year offer 2017

இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு! மைத்திரி மகிந்த தரப்பின் முக்கிய கோரிக்கை

11/07/2018

முன்னாள் பிதரமர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்காது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என மைத்திரி - மகிந்த தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு நடுநிலையாக செயற்பட்டாலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியிடம் விளைபோயுள்ள ஒரு சிலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரையும் தவறாக வழிநடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரணிலை ஆதரிக்காது கூட்டமைப்பு நடுநிலையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு நடுநிலையாக செயற்பட்டாலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம்.

ஏனெனில் அரசியல் தீர்வு விடயத்தில் மைத்திரி -மஹிந்த கூறுவதையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

இதேவேளை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நேரங்களில் வெளிநாட்டு தூதுவர்களை சபாநாயகர் கரு ஜயசூரிய சந்திப்பது நாடாளுமன்ற விதிமுறைகளை முற்றிலும் மீறும் செயற்பாடாகும்.

சபாநாயகர் மிகவும் நல்ல மனிதர், எம் அனைவரை விடவும் ஜனநாயக ரீதியில் செயற்படத் தெரிந்த மனிதர். அவர் மீது எமக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.

ஜனநாயகம் பற்றி அதிகம் தெரிந்தவர் இவ்வாறு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது” என அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.