New year offer 2017

இலங்கை செய்திகள்

பரபரப்பான சூழ்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

11/07/2018

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படாது என அரசாங்க தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த பதற்ற சூழ்நிலையில் மகிந்த மற்றும் மைத்திரிக்கிடையில் இன்று மாலை அவசர சந்திப்புக்களும் நடைபெற்றன.

சில திட்டமிட்ட குழுக்கள் இது தொடர்பிலான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

எனினும், இந்த அடிப்படையற்ற பொய்யான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.