New year offer 2017

இலங்கை செய்திகள்

மைத்திரியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டவுள்ள ஊடக அமைச்சின் நிறுவனங்கள்

11/07/2018

வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் துறைகள் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளனர்.

19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் கொண்டு வர முடிந்த அமைச்சுக்கள் வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் நிறுவனங்களின் எண்ணிக்கையை வரையறுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மகிந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.