New year offer 2017

இலங்கை செய்திகள்

மகிந்தவை சர்வதேச நாடுகள் ஏன் வாழ்த்த வில்லை பின்னணியை விளக்கும் மாவை

11/07/2018

ஒரு நாட்டில் ஜனாதிபதி அல்லது பிரதமர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டால் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பார்கள்.

ஆனால் இங்கு அவ்வாறு ஒரு பிரதமர் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதும் அத்தகைய வாழ்த்துக்களை யாரும் தெரிவிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்றைக்கு உலகத்திலுள்ள பல நாடுகளும் இந்த நியமனத்தை எதிர்த்து தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.

ஆகவே இந்த நியமனம் அரசியலமைப்புக்கு முரணாக ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதென்பதை சகல தரப்பினர்களுமே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதாக மாவை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஒரு மோசமான ஆட்சி நடைபெறுவதால் அதனை மாற்ற வேண்டுமென்ற அடிப்படையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைக்கப்பட்டார்.

இவ்வாறு தேர்தலில் பொது வேட்பாளராக வந்த போதும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வழங்கிய வாக்குறுதிகளையும் மறந்து விட்டார்.

அதிலும் குறிப்பாக கடந்த மாத இறுதியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி புதிய பிரதமராக மகிந்த ராஐபக்சவை நியமித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் இச் செயற்பாடுகள் அரசியலமைப்பை மிறுகின்ற சட்டத்திற்கு முரணாண செயற்பாடாகவே காணப்படுகின்றது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.