New year offer 2017

இலங்கை செய்திகள்

நாடாளுமன்றை கலைக்க மைத்திரி போடும் திட்டம் பொன்சேகா போர்க்கொடி

11/07/2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சரத்பொன்சேகா அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முயலக்கூடாது என சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் இதற்கெதிராக கிளர்ந்தெழுவார்கள். இலங்கையின் அரசமைப்பின் கீழ் நாடாளுமன்றத்தின் முழுமையான ஆயுள்காலம் பூர்த்தியாகும்வரை அதனை கலைக்க முடியாது.

இந்நிலையில், அரசாங்கமொன்று அதன் நாலரை வருடகாலத்தை பூர்த்தி செய்யும்வரை அதனை கலைக்க முடியாது என சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படாது என அரசாங்க தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.