New year offer 2017

இலங்கை செய்திகள்

முடங்கிப் போன கட்டுநாயக்க விமான நிலையம்

11/08/2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்சார தடை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தின் பிரதான மின்சாரம் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று பல முறை மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மின்விநியோக தடையினால் விமான நிலைய செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. எனினும் அந்த சிக்கல்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கியதினால் மின்சாரம் கம்பியில் தீப் பரம்பல் ஏற்பட்டமையினால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பிய போதிலும், பழுது பார்க்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.