New year offer 2017

இலங்கை செய்திகள்

வவுனியாவில் பொலிஸாரின் திடீர் பரிசோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருள்

12/07/2018

வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 12.05 மணியளவில் பதுளை மாவட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்தில் கேரள கஞ்சாவினை கடத்தி செல்வதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நொச்சிமோட்டை பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இரண்டு கிலோ கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.