New year offer 2017

இலங்கை செய்திகள்

சாராயம் குடித்த நபருக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு

01/08/2019

திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் சாரயம் குடித்து விட்டு வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபரொருவருக்கு ஒரு மாதம் கட்டாய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் சாராயம் குடித்துவிட்டு வீதியில் நின்று கொண்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருந்ததோடு, வீதியில் செல்லுவோருக்கு தகாத வார்த்தைகளினால் தூற்றியதாக பொலிஸாருக்கு அவசர தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபர் ஸ்ரீ பக்மிகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.