New year offer 2017

இலங்கை செய்திகள்

வெளிநாட்டு பொலிஸாரிடம் சிக்கிய இலங்கையர்களில் இருவர் பெண்கள் இரத்தத்தில் வெளிவந்த உண்மை

02/09/2019

டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் தலைமையிலான குழுவினர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பிரதான வர்த்தகர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 39 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்கள் ஆவார்.

39 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட போது, 31 பேரின் இரத்தத்தில் கொக்கேன் என்ற போதைப்பொருள் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எட்டுப் பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடவில்லை என கண்டறியப்பட்டதன் பின்னர், அவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 31 பேரும் நாளைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இவர்கள் 14 நாட்களுக்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்த அந்நாட்டு சட்டத்தின்படி அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

31 இலங்கையர்களுக்கும் எதிரான டுபாய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமாயின் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.