New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கை மக்கள் மீண்டும் திரும்பவேண்டும்

02/11/2019

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் விருப்பமாகும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ் அகதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக சென்னைக்கு விஜயம் செய்திருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தமது பிரஜைகள் திரும்பவும் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கைக்கு திரும்பும் அகதிகளுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்து தரவுள்ளதாகவும் ஒஸ்டின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

இந்த வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.