New year offer 2017

இலங்கை செய்திகள்

மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது

03/20/2019

மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை கணிசமான முன்னேற்;றத்தை அடைந்திருப்பதாக வெளிவிவகாரஅமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெட்அம்மையார் இன்று இலங்கை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தபோது, வெளிவிவகார அமைச்சர் இதன் போது அறிக்கையை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

 

 

நிகழ்ச்சி நிரலில் இரண்டாவது விடயமான இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை என்பவற்றை மேம்படுத்துதல் தொடர்பாக மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருடனான நெருங்கிய உரையாடல் சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான திலக் மாரபன அவர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை: 20 மார்ச் 2019 ஜெனீவா

சுருக்கமான அறிக்கை

திரு. தலைவர்,

உயர்ஸ்தானிகர் அவர்களே மற்றும் பிரதிநிதிகளே,

2017ம் ஆண்டு முதல் மனித உரிமைகள் முன்னணி தொடர்பாக இலங்கையின் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை இந்த அமர்வில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். பாராளுமன்ற சகபாடி கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, வடமாகாண ஆளுநர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் மற்றும் சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்களும் என்னுடன் கலந்துகொண்டிருக்கின்றனர்.

உயர்ஸ்தானிகர் அவர்களே,

அனைத்துப்பங்குதாரர்களையும் நோக்கி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறந்த, ஆக்கபூர்வமான, ஒத்துழைப்புமிக்க உங்களது அறிக்கையினூடான ஒப்புதலுக்கு ஆரம்பத்திலேயே உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

ஓவ்வொரு நாட்டினதும் போருக்குப்பிந்திய சூழல் தனித்தன்மை வாய்ந்தது என்பதில் நீங்கள் உடன்படுவீர்கள். பிறரது அனுபவங்களிலிருந்து எமக்கு படிப்பினை பெற முடியும். ஆனால் அடிப்படையில் பார்க்கும்போது நாட்டின் கடமைகளில் முதன்மையானவற்றின் அச்சாணியை நாங்கள் செயற்படுத்துவதினூடாக நல்லிணக்கத்திற்கான எமக்கேயுரிய வழிமுறை உள்நாட்டின் மூலமே செயற்படுத்தப்பட வேண்டும்:

உண்மையைக் கண்டறிதல் என்ற பகுதியில், காணமல் போனோருக்கான அலுவலகம் சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. போதுமான வளங்களுடன் அது செயற்படுத்தப்படுகின்ற அதேவேளை உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றினை ஸ்தாபிப்பதற்கு தேவையான சட்ட வரைவுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை கரிசனை காட்டுகின்றது.

நீதித்துறையை பொறுத்தவரையில், பயங்கரவாதத் தடை சட்டத்திற்குக் கீழாலுள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு அதற்குக் கீழாலுள்ள வழக்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சர்வதேச தரங்களையும் சிறந்த நடைமுறைப்படுத்தல்களையும் உறுதிப்படுத்துகின்ற வகையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முன்னுரைக்கப்பட்ட சட்டங்களினால் பயங்கரவாதத் தடை சட்டத்தை மாற்றுவதற்கான கலந்தாலோசனைகள் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

இழப்பீடுகளைப் பொறுத்தவரையில், இழப்பீடுகளுக்கான ஓர் அலுவலகம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையினால் மூன்று ஆளுநர்கள் பதவிப்பிரமாணத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2019ம் ஆண்டு பாதீட்டில், இல்லாமைக்கான சான்றிதழைப் பெற்ற, காணாமற்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுக்கு 500 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

திரும்பவும் பிரச்சினைகள் நிகழாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை முழுமைப்படுத்துவதற்காக நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

உயர்ஸ்தானிகர் அவர்களே,

இலங்கைப் பாராளுமன்றத்தில் 14 மார்ச் 2019ம் திகதி நான் குறித்துக்காட்டியது போல, 2009ம் ஆண்டில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பூமிகளில் 75 வீதமே விடுக்கப்பட்டுள்ளது என ஆளுநரின் அறிக்கையில் 35வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தரவானது சரியான தரவுடன் குறிப்பிடத்தக்களவு வித்தியாசப்படுகின்றது. மார்ச் 2019 இல் 88.87 வீதமான அரச காணிகளும் 92.16 வீதமான தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அறிக்கையில் 23 வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னாரிலுள்ள எலும்புக்கூடு அகழ்வுப் பணியைப் பொறுத்தவரையில், எலும்புக்கூடுகள் இலங்கை பாரியளவில் ஐரோப்பிய காலனித்துவத்திற்குட்பட்ட காலப்பகுதியின்போது கி.பி. 1499 – கி.பி. 1719 க்குற்பட்டவையென ஐக்கய அமெரிக்க ஆய்வுகூட அறிக்கை வெளியாகியிருந்தும்கூட அறிக்கையானது “ஏனைய அகழ்வுகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்” என எதிர்வுகூறுகின்றது. இந்த வினைமைமிக்க விடயம் தொடர்பாக பொது அறிக்கையொன்றில் இவ்வாறான கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படமுடியாது. அதற்கும் மேலோக அறிக்கையிலுள்ள ஏனைய வலியுறுத்தல்களின் நம்பகத்தன்மையிலும் சந்தேகத்தை உண்டுபண்ணலாம்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையின் பத்தி 68 (சி) யைப் பொறுத்தவரையில் (A/HRC/40/23) ஓர் கலப்பு நீதிமன்றத்திற்கான சட்டமியற்றலுக்கு அழைப்பு விடுக்கின்றது. இது தொடர்பாக எமது நிலைப்பாட்டினை தெளிவு படுத்துவதற்கு விரும்புகின்றேன். அது வருமாரு:

இலங்கை அரசு உயர் அரசியல் மட்டத்தில், பகிரங்கமாகவும் தற்போதைய மற்றும் முன்னாள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர்கள் மற்றும் ஏனைய இடைத்தரகர்களுடனான சந்திப்புகளிலும் யாப்பு மற்றும் சட்ட சவால்கள் இலங்கையின் நீதிச் செயற்பாடுகளில் இலங்கைப் பிரஜையல்லாதவர்களை உள்ளடக்குவதனை விட்டும் தடுக்கின்றன என தெளிவு படுத்தியிருக்கின்றோம். ஏதாவதொரு செயற்பாட்டில் இலங்கை பிரஜையால்லாதவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுது 2/3 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பு வாக்கு வழங்கி யாப்பில் மாற்றம் கொண்டுவரப்படுதனூடாகவும் பொதுஜன வாக்கெடுப்பினூடாகவுமே அன்றி சாத்தியப்படமாட்டாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.

நேரக் கட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலக அறிக்கையின் சம்பந்தப்பட்ட பத்திகளுக்கு விரிவான பதிலை முன்வைக்கக் கூடிய எனது முழு அறிக்கையை பதிவு செய்வதற்கு விரும்புகின்றேன்.

உயர்ஸ்தானிகர் அவர்களே,

அதிகரித்த பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு உலகு முகம் கொடுக்கும் ஒரு தருணத்தில், கடந்த வருடம் இந்த சபையில் நான் குறிப்பிட்டது போல பிரச்சினைகளின் போது இலங்கை பாதுகாப்புப் படையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக பிரகடணப்படுத்தப்பட்ட ஒரு குழுக்கெதிரான நடவடிக்கையே அன்றி எந்தவொரு சமூகத்திற்குமெதிரான நடவடிக்கையல்ல. மேலும், 2015 இலங்கை தொடர்பான விசாரனை அறிக்கையிலோ அல்லது வேறு ஏதும் உத்தியோகபூர்வ ஆவணங்களிலோ தனிநபர்களுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுகளோ அல்லது மனிதத்துக்கெதிரான குற்றச்சாட்டுக்களோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டிய அம்சமாகும். குற்றங்களில் ஈடுபட்டதை விசாரணைகள் உறுதிப்படுத்தாமல் சேவையில் இருக்கின்ற அல்லது ஓய்வுபெற்ற இலங்கை பாதுகாப்புப் படை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களது உரிமைகளை பிடுங்குவது அநீதியாகும்.

இந்த வலியுறுத்தல்கள் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா முகவர்கள் மேலும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச நிறுவனங்களின் சுதந்திரமான கணிப்பீடுகளுக்கும் நேரடியாக முரண்படுவதுடன் 12 ஒக்டோபர் 2017 அன்று ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரபுக்களின் இல்லத்தில் திருத்தியமைக்கப்பட்ட விடயங்கள் மட்டுமல்லாது பொதுத்தளங்களிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் எழுத்துக்களுக்கும் முரண்படுகின்றன .

உயர்ஸ்தானிகர் அவர்களே,

கொடுக்கப்பட்ட இந்தப் பின்னணியில், இணை அனுசரணை வழங்குகின்ற நாடுகள் உட்பட பல நாடுகள் பேச்சுவார்த்தைகளில் இந்த கள உண்மைகளை ஒப்புக்கொள்கின்ற அதேவேளை, கடிதத்திலுள்ள பொருத்தமின்மைகள் திருத்திக் கொள்ளப்படவேண்டும். அதேபோன்று சர்வதேச சிறந்த செயன்முறைகளுடன் பொருந்துகின்ற புத்தாக்க மற்றும் சாத்தியமான உள்நாட்டு பொறிமுறைகள் மற்றும் செயன்முறைகளை கண்டு கொள்வதில் இலங்கை ஊக்கப்படுத்தப்படுவதோடு உதவியளிக்கப்படவும் வேண்டும். குறிப்பாக அண்மையில் 2018ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட அரசியல் அம்சங்களின்போது எமது நீதி, அதிகார மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் சுதந்திரம் மற்றும் தன்முனைப்பு என்பவற்றை பிரதிபலித்தது அவற்றை தீர்த்தன. ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல “பாதிக்கப்பட்டவர்களினதும் சமூகத்தினதும் நம்பிக்கையை பாரியளவில் பெற்றுக்கொள்ளல்” என்பதனூடாக மட்டுமே இந்த நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவதற்கு எம்மால் முடியுமாக இருக்கும்.

அரசாங்கம் சார்பாக, மேலே உள்ள அளவுகோல்களின் அடிப்படையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இலங்கை தொடர்ந்து கடமையாற்றும் என நான் மீள வலியுறுத்துகின்றேன்.