New year offer 2017

இலங்கை செய்திகள்

புதிய அரசியலமைப்பு சட்டத்தால் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கும் கோத்தபாய

03/23/2019

நாட்டில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கம் கொண்டு வர தயாராகி வரும் புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற எளிய அமைப்பின் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், அப்படியான நிலைமையில், ஸ்திரமான அரசாங்கம் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறித்து பேசினாலும் இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் நாட்டில் முதலீடுகளை செய்யக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுக்கவில்லை.

எம்முன் பல சவால்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டுமாயின் அந்த சவால்களுக்கு சரியான பதில்களை வழங்க முடியுமாக இருக்க வேண்டும்.

இதனையே மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கின்றனர். தற்போது சவால்களை எதிர் கொள்ள பேச்சால் மாத்திரம் தயாராக இருக்கவில்லை.

நாங்கள் வேலைகளை செய்து ஒப்புவித்து காட்டியவர்கள் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.