New year offer 2017

இலங்கை செய்திகள்

வில்பத்து எதிர்ப்பு ஜனாதிபதியை இலக்கு வைத்த அரசியல் திட்டம்

03/24/2019

வில்பத்து வன அழிப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள எதிர்ப்பு ஜனாதிபதியை இலக்காக கொண்டது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் அது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வில்பத்து பகுதியில் 2012ஆம் ஆண்டு ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் மீள்குடியேற்றம் நடைபெற்றது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அது குறித்து தெரிவித்துள்ளார் எனவும் தயாசிறி கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில், சமூக வலைத்தளங்கள் மூலம் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இது பச்சை காட்டை தீ வைத்து அழிப்பது போன்ற அரசியல் திட்டம்.

வில்பத்து வனப் பகுதி தற்போது மீள்குடியேற்றங்களோ, காடு அழிப்போ நடைபெறுவதில்லை. இதனால், இந்த நிலை சம்பந்தமாக அரசாங்கம் முழுமையான விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.