New year offer 2017

இலங்கை செய்திகள்

ராஜபக்சக்களை பிளவடையச் செய்ய ரணிலால் முடியாது

03/25/2019

மஹிந்த ராஜபக்சக்களை பிளவைடயச் செய்வதற்கு ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, பண்டாரநாயக்க குடும்பத்தை பிளவடையச் செய்தது போன்று, ரணில் விக்ரமசிங்கவினால் ராஜபக்ச குடும்பத்தை பிளவடையச் செய்ய முடியாது.

ஒளிந்து ஒளிந்து முபமூடி அணிந்திருந்த தேசிய அரசாங்கம் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றிய விடயங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் என்ற பேச்சினால் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன என டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.