New year offer 2017

இலங்கை செய்திகள்

ஐ நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு இத்தனை இலட்சம் அமெரிக்க டொலர்கள் தேவையா

03/25/2019

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்துக்கு 3 லட்சத்து 37ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மனித உரிமைகள் பேரவையின் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானத்தில் இலங்கைக்கு இரண்டு ஆண்டுகால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் 12 கள ஆய்வுப் பணிகளையும், 2021ம் ஆண்டில் இரண்டு கள ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அறிக்கையிடல் உள்ளிட்ட பணிகளுக்காகவும் குறித்த நிதி அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை இலங்கையில் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.