New year offer 2017

இலங்கை செய்திகள்

பெண்களின் பங்களிப்பின்றி பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை பிரதமர்

03/26/2019

நாட்டின் பெரும்பான்மை மக்களான பெண்களை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக வலுப்படுத்த தற்போதைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால், பிரதேச சபை மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 ஆக அதிகரிக்க முடிந்தமையானது பெண்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றி எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.