New year offer 2017

இலங்கை செய்திகள்

அரச வீடுகளை விட்டு வெளியேறாத 19 முன்னாள் அமைச்சர்கள்

03/26/2019

முன்னாள் அமைச்சர்கள் 19 பேர் தாம் அமைச்சர்களாக பதவி வகித்த போது பயன்படுத்தி அரசுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை மீள கையளிக்கவில்லை என அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை மீளக் கையளிக்குமாறு பல முறை அறிவித்தும், இதுவரை இல்லங்களை அவர்கள் அரசிடம் கையளிக்கவில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் 20 பேர் உத்தியோகபூர்வ இல்லங்களை கோரியுள்ளதுடன், இவர்களுக்கு கிடைக்க வேண்டிய இல்லங்களை முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் இவ்வீடுகளை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.