New year offer 2017

இலங்கை செய்திகள்

நுவரெலியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர்

04/15/2019

நுவரெலியாவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இன்றைய தினம் நுவரெலியா பம்பரகலை பகுதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நுவரெலியாவில் பம்பரக்கலை ஸ்ரீ மகா விகாரையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என பிராத்தனையில் ஈடுப்பட்டுள்ளார்.

அத்தோடு, நுவரெலியா பம்பரக்கலை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விகாரையின் விகாராதிபதி பிரதமரிடம் தெரிவித்ததையடுத்து, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

விகாராதிபதி மீபனாவே சுகந்தநந்த தலைமையில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வில், நுவரெலியா மாநகர சபை மேயர் சந்தனலால் கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.