New year offer 2017

இலங்கை செய்திகள்

பயங்கரவாதம் எங்கும் வெற்றி பெற்றதில்லை ஜனாதிபதி தெரிவிப்பு

05/08/2019

பயங்கரவாதம் உலகில் எந்த இடத்திலும் வெற்றி பெற்றதில்லை என்பதுடன் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் மிலோச்ச நோக்கங்களுக்கு இலங்கை மக்களை பிரிக்க இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி, கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் மாகாண முஸ்லிம் இளைஞர்களை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதல் சம்பவம் இலங்கையின் பிரச்சினை இல்லை. சர்வதேசத்துடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத செயல்.

இந்த சர்வதேச பயங்கரவாத அணிகளுக்கு எதிராக உலகில் பலமிக்க நாடுகள் எழுச்சி பெற்றுள்ளன.

பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவளை இலங்கையில் இருந்து முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளை எமது பாதுகாப்பு தரப்பினர் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால், நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான பயங்கரவாத செயல்களுக்கு உதவும் எந்த செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டில் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.