New year offer 2017

இலங்கை செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பூச்சாண்டியாக காட்ட கூடாது பிரதமர்

05/08/2019

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக பூச்சாண்டியை உருவகித்து காட்ட எந்த தேவையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

குறுகிய அரசியல் பேதங்களையும் கருத்து முரண்பாடகளையும் புறந்தள்ளி விட்டு, நாட்டின் சட்டத்தை மேலும் வலுப்படுத்தி, அனைவரும் இணைந்து ஒன்றாக பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க இணைந்து செயற்படுமாறு முழு இலங்கை வாழ் மக்களின் பிரதிநிதிகளாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை விடுக்கின்றேன்.

இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற துரிதமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பொது இணக்கப்பாட்டின் கீழ் நிறைவேற்ற உதவுமாறு அனைவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.