New year offer 2017

இலங்கை செய்திகள்

ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய மௌலவிகள் உள்ளிட்ட 63 பேர் மட்டக்களப்பில் கைது

05/26/2019

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதத்டுன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென அடையாளம் காணப்பட்ட சஹரான் காத்தான்குடியைச் சேர்ந்தவரென பொலிஸார் அண்மையில் அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற நாள் முதல் இதுவரை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளில் மௌலவிகள் உட்பட 63 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பிரதேசங்களில் இராணுவத்தினர் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.