New year offer 2017

இலங்கை செய்திகள்

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு மற்றுமொரு பதவி மைத்திரி நியமனம்

05/27/2019

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தினை துரித கதியில் அபிவிருத்தி செய்யும் வகையில் குறித்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.