New year offer 2017

இலங்கை செய்திகள்

மருத்துவர் தனியாக சத்திர சிகிச்சை செய்வதில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க

05/28/2019

மருத்துவர் மொஹமட் ஷாஃபி ஷியாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் பொறுப்பை இலங்கை மருத்துவச் சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை பல கோணங்களில் பார்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இது சம்பந்தமான முறைப்பாடுகளை ஆராய்ந்து அறிவியல் ரீதியான விசாரணை நடத்த வேண்டும். இலங்கை மருத்துவச் சபை இதற்கு பொறுத்தமானது.

மருத்துவச் சபை சுதந்திரமான நிறுவனம். மருத்துவச் சபை நியமிக்கும் விசாரணைக்குழு ஊடாக மருத்துவரின் செயற்பாடுகள் பற்றி விசாரித்து அறிய முடியும்.

எது எப்படி இருந்த போதிலும் மருத்துவர் ஒருவர் தனியாக சத்திர சிகிச்சைகளை செய்வதில்லை. அவருக்கு உதவ மருத்துவர்களும், தாதியரும் இருப்பார்கள்.

அவர்களிடம் சாட்சியங்களை பெற்று அப்படியான குற்றத்தை செய்திருந்தால், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மக்களின் இந்த சந்தேகத்தை போக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் சகல மருத்துவர்கள் மீதும் சந்தேகம் ஏற்படக் கூடும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.