New year offer 2017

இலங்கை செய்திகள்

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் நாளை முதற்தடவையாககூடுகிறது தெரிவுக்குழு

05/28/2019

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாளை (29) காலை முதற்தடவையாக கூடவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டத்தொகுதியிலுள்ள குழு அறை 3 இல் காலை 9 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை, இவ்விவகாரம் குறித்து அலசி ஆராயப்படவுள்ளது என ஆளுந்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமர்வில் கலந்துகொண்டு, செய்திகளை திரட்டுவதற்காக முதற்தடவையாக ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பான செய்திகளை நேரடியாக திரட்டுவதற்கு இதற்கு முன்னர் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று கூட்டு எதிரணியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அறிவித்துள்ளன.