New year offer 2017

இலங்கை செய்திகள்

வடக்கு ஆளுநருக்கும் சிறீதரன் எம்பிக்குமிடையில் சந்திப்பு

05/28/2019

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக நிலைமைகள் குறித்தும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ள விவசாய பண்ணைகள் மற்றும் மர முந்திரிகை தோட்டங்களை கூட்டுறவு முறையினூடாக அப்பிரதேசங்களின் மக்களுக்கு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆளுநரிடம் தனது கோரிக்கையினை முன்வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.

வடமாகாணத்தின் தண்ணீர் மற்றும் காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆளுநர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆதரவினையும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ஆளுநரின் மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.