New year offer 2017

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் கருத்தால் துருக்கி தூதரகம் கொதிப்பு

05/29/2019

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கொழும்பிலுள்ள துருக்கி தூதுரகம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விதைப்பதற்காக துருக்கியின் நிதி பயன்படுத்தப்படுவதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில், தேரரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கொழும்பிலுள்ள துருக்கி தூதுரகம் நிராகரித்துள்ளது.

துருக்கியை மையப்படுத்தி ஞானசார தேரர் முன்வைத்த கருத்துகள் அடிப்படையற்றவை என்றும் தூதரகம் விசனம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் குழப்பங்களை விளைவிப்பதற்காக துருக்கியிலிருந்து 40 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்படுவதாக தேரர் முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது.

இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் உதவிகளை வழங்குவதே துருக்கியின் நோக்கமாகும்.

இதற்கான நிதிகள் யாவும் வெளிப்படையானவை. இரகசியமாக எதுவும் நடைபெறுவதில்லை.’’ என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.