New year offer 2017

இலங்கை செய்திகள்

பொய்ப் பிரசாரங்களை தடுக்க அனைவரும் இணைய வேண்டும் நளின் பண்டார

05/29/2019

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டிற்குள் நடக்கும் பொய்ப் பிரசாரங்களை தடுப்பதற்காக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதியமைச்சர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் விதமான சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. குறிப்பாக பாடசாலைகளில் திட்டமிட்ட வகையில் அச்சத்தை ஏற்படுத்த சிலர் அண்மையில் முயற்சித்தனர்.

இதனால், நாடு என்ற வகையில் கட்சி, நிற பேதங்கள் இன்றி இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.