New year offer 2017

இலங்கை செய்திகள்

சஜித்துடனான திடீர் சந்திப்பு தொடர்பாக கோத்தாபாய வெளியிட்ட தகவல்

10/07/2019

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்று குறித்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 6 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

41 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதும், 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் மூவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தொடர்பாக மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், தான் அவரை மதிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தேர்தல்கள் ஆணையகத்தில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தாபாய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய குறித்த சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிடும் பொது

அதில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை தேர்தல்கள் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேளை என தமது சந்திப்பை நினைவு கூர்ந்தேன்.

போட்டியாளர்கள் வேறுபட்ட கொள்கைகள் மற்றும் நடத்தைகள் உடையவர்களாக இருக்கலாம் ஆனால் ஒருவருக்கொருவர் மரியாதை அளிக்க வேண்டும் என்பதே எனது உண்மையான நம்பிக்கை எனவும் வெற்றி பெறுவது நிச்சயமாக இலங்கையரே எனவும் தெரிவித்துள்ளார்.