New year offer 2017

இலங்கை செய்திகள்

நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டேன் சஜித்

10/19/2019

பல்வேறு அரசியல் அணிகள் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு பணிந்து தான் செயற்படுகிறேன் என எதிர் அரசியல் அணிகள் தற்போது தெரிவித்து வருவதாகவும் தான் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியும் நபர் கிடையாது எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களின் நிலைப்பாட்டுக்கு மாத்திரமே தான் அடிப்பணிவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி உடுநுவர, கெலிஓயா நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

நான் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருந்தால், இதற்கு முன்னர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருப்பேன்.

எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டும் நான் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை பெறவில்லை. நாட்டு மக்களின் ஆணையில் நான் நாட்டுக்கு சேவையாற்றுவேன்.

பொது மக்களை தவிர எந்த ஏகாதிபத்திய எதிர் சக்திகளுக்கு பிரேமதாசவின் மகன் அடிப்பணிய மாட்டான். மக்கள் எனக்கு பலத்தை கொடுத்தால், நாட்டின் வரலாற்றில் இலவசமாக நாட்டுக்கு சேவை செய்யும் ஜனாதிபதியாக நான் இருப்பேன்.

அமைச்சர் என்ற வகையில் எனக்கு கிடைத்த சகல கொடுப்பனவுகளையும் நாட்டின் வறிய மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க அன்பளிப்பு செய்தேன்.

வேலை வாய்ப்பின்மையை குறைத்து, சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கி தாய் நாட்டை கட்டியெழுப்புவேன்.

நாட்டின் ஜனநாயக அரசியல் வரலாற்றில், மிகப் பெரிய சமூக அரசியல் பொருளாதார புரட்சி சஜித் பிரேமதாச ஆரம்பிப்பேன். இது எனது வலுவான காலம். சரியாக நிற்க முடியாத காலம் எனக்கும் வரும். கேள்வி கேட்கும் போது பதிலளிக்க முடியாது சுற்றி முற்றி பார்க்கும் காலம் வரும்.

சிலர் அரசியலுக்கு வந்த பின்னர், மீண்டும் திரும்பி செல்லாமல் பிடித்து தொங்கி கொண்டிருக்கின்றனர். நான் அப்படி செயற்பட தயாரில்லை. எனது அரசியல் பயணத்தை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.