New year offer 2017

இலங்கை செய்திகள்

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் உடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சம்பிக்க ரணவக்க

10/20/2019

நவம்பர் 16ம் திகதி நடைபெறும் தேர்தல் எதிர்காலத்தில் நடக்கவுள்ள தேர்தல்களுக்கு தாய் தேர்தலாக இருக்கும் என்று அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகின்றவர் 2020 மார்சில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கின்றார்.

இதனையடுத்து பொதுத்தேர்தல் அதே மாதத்தில் அடுத்தடுத்த மாதங்களில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன.

அதே நேரம் புதிய ஜனாதிபதி மாகாணசபை தேர்தல்களையும் நடத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.