New year offer 2017

இலங்கை செய்திகள்

13 அம்ச கோரிக்கைகளின் அடிப்படையில் த தே கூட்டமைப்புடன் பேச சஜித் தயாரில்லை

10/28/2019

13 அம்ச கோரிக்கைகளின் அடிப்படையில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தயாரில்லை என அவரது பிரச்சார அணியின் பிரதிநிதிகளில் ஒருவரான சட்டத்தரணி ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்வது என்ற நிலைப்பாட்டையே சஜித் பின்பற்றுகின்றார் எனவும் அதுவே அவரது தெளிவான நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை விடவும் வேறு எதைப் பற்றியும் பேச வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13 நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சஜித் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாது என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.